வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (15:14 IST)

கன்னி: ஐப்பசி மாத ராசி பலன்கள்

கிரகநிலை: ராசியில் புதன்(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் கேது - சுக  ஸ்தானத்தில்  குரு, சனி - அஷ்டம  ஸ்தானத்தில் செவ்வாய்(வ)- பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:
 
வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம்  திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும்.  மற்றவர்களுக்கு உதவும்  போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமை யாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம். மேலிடத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். பெண்களுக்கு  தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். 
 
உத்திரம் 2, 3, 4 பாதம்:
 
இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில்  செய்து லாபம் பார்க்கலாம்.
 
அஸ்தம்:
 
இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும்  நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.
 
சித்திரை 1, 2, பாதம்:
 
இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில்  ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.
 
பரிகாரம்: ஏழை பிராமணருக்கு அன்னமிட்டு உதவுங்கள். தொல்லைகள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 31; நவம்பர் 1
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 24, 25.